யூதர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தாரும் கொண்டாடும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை).
அரபு நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். ஆரம்ப கால யூத, கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை. ஆனால் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம் வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர். இந்த விபரங்களை ஏன் எடுத்து எழுதுகிறோம் என்றால்...